• May 28 2026

உயிர் போராட்டத்தில் முன்னாள் போராளி - தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை

Chithra / May 27th 2026, 3:01 pm
image

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளி  எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் கோரி நிற்கிறார்.


தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 


"எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.


இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள், என அவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.


உயிர்ப ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்கு உதவ விரும்பும் நற்பண்பாளர்கள், கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.


வங்கி விபரங்கள்: பெயர்: எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan), வங்கி: லங்கா வங்கி (BOC), கிளை: கல்வியங்காடு, கணக்கு இலக்கம்: 94948569, தொடர்பு இலக்கம்: தொலைபேசி: 0775621613


உயிர் போராட்டத்தில் முன்னாள் போராளி - தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகத் தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளி  எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் கோரி நிற்கிறார்.தனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தடுப்பு முகாம்களிலும், சித்திரவதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர், தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சையை உடனடியாகச் செய்யாவிட்டால் எனது உயிர் பிரிந்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவியும், பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.இந்த அறுவை சிகிச்சைக்குக் குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே, எனது தமிழ் மக்கள் என்னை எந்நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள், என அவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.உயிர்ப ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்கு உதவ விரும்பும் நற்பண்பாளர்கள், கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.வங்கி விபரங்கள்: பெயர்: எதிர் மன்ன சிங்கம் கிரேசியன் (Ethirmannasingam Grashan), வங்கி: லங்கா வங்கி (BOC), கிளை: கல்வியங்காடு, கணக்கு இலக்கம்: 94948569, தொடர்பு இலக்கம்: தொலைபேசி: 0775621613

Advertisement

Advertisement

Advertisement