• Jul 17 2026

முன்னாள் IGP விக்ரமரத்ன மரணம்; களமிறங்கிய பொலிஸ் குழுக்கள்

Chithra / Jul 17th 2026, 12:34 pm
image


முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மலாபே, தலஹேன பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (17) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர், துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.


சம்பவத்தைத் தொடர்ந்து சி.டி. விக்ரமரத்ன முல்லேரியா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், அவரது மரணம் தற்கொலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இறப்பு தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணத்திற்கான முழுமையான காரணங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் IGP விக்ரமரத்ன மரணம்; களமிறங்கிய பொலிஸ் குழுக்கள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மலாபே, தலஹேன பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (17) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர், துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.சம்பவத்தைத் தொடர்ந்து சி.டி. விக்ரமரத்ன முல்லேரியா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.இந்நிலையில், அவரது மரணம் தற்கொலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இறப்பு தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணத்திற்கான முழுமையான காரணங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement