பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கு காரணம் என பேருவளை காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினரின் மனைவி மீது வாள்வெட்டு வெளியான காரணம் samugammedia பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 அங்குல நீளமான கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்முல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்கு காரணம் என பேருவளை காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்