முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார சுவிட்சர்லாந்து சென்றதாகவும் பின்னர், அங்கிருந்து பிரிதொரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் மனுஷ நாணயக்கார வெளிநாடு சென்றதாகவும், பின்னர் அவரது குடும்பத்தினர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், முன்னாள் அமைச்சர் வருட இறுதிக் கொண்டாட்டங்களுக்காக குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் மனுஷ அதிகாரபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் வெளிநாடு பறந்த முன்னாள் அமைச்சர் மனுஷ முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மனுஷ நாணயக்கார சுவிட்சர்லாந்து சென்றதாகவும் பின்னர், அங்கிருந்து பிரிதொரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.முதலில் மனுஷ நாணயக்கார வெளிநாடு சென்றதாகவும், பின்னர் அவரது குடும்பத்தினர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும், முன்னாள் அமைச்சர் வருட இறுதிக் கொண்டாட்டங்களுக்காக குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மனுஷவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் மனுஷ அதிகாரபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.