• Nov 26 2024

முன்னாள் எம்.பி. சுஜீவ சேனசிங்கவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு

Chithra / Nov 25th 2024, 1:15 pm
image

 

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் 100 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. 

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 100 ரூபா மில்லியன் பெறுமதிமிக்க குறித்த சொகுசு வாகனம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவால் சட்டவிரோதமாக ஒழுங்குபடுத்தபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

நவம்பர் 08 ஆம் திகதி, வலான ஊழல் தடுப்பு குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில், வாகனத்தின் நிலை குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, வாகனம் தொடர்பான அறிக்கையை அரசாங்க பகுப்பாய்வரிடம் சமர்ப்பிக்குமாறு சேனசிங்கவுக்கு பணிக்கப்பட்டது. 

கடந்த நவம்பர் 11ஆம் திகதி, முன்னாள் எம்.பி.யின் வாகனத்தை காவலில் எடுத்து அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது. 


முன்னாள் எம்.பி. சுஜீவ சேனசிங்கவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் 100 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ரூபா மில்லியன் பெறுமதிமிக்க குறித்த சொகுசு வாகனம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவால் சட்டவிரோதமாக ஒழுங்குபடுத்தபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.நவம்பர் 08 ஆம் திகதி, வலான ஊழல் தடுப்பு குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில், வாகனத்தின் நிலை குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, வாகனம் தொடர்பான அறிக்கையை அரசாங்க பகுப்பாய்வரிடம் சமர்ப்பிக்குமாறு சேனசிங்கவுக்கு பணிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 11ஆம் திகதி, முன்னாள் எம்.பி.யின் வாகனத்தை காவலில் எடுத்து அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது. 

Advertisement

Advertisement

Advertisement