அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்குப் புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பழமை வாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிதிக் குறைப்பு இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தைச் செலுத்தும்.
இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள். குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும்.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த செயற்பாட்டின் விளைவாக 'குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்'.
அத்துடன், அமெரிக்க நிதி உதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவைக் காணும் எனவும் அந்த செய்தி வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் நிதிக் குறைப்பு - 2030 ஆம் ஆண்டில் 14 மில்லியன் இறப்புக்களுக்கு வாய்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 14 மில்லியனுக்கும் அதிகமான இயற்கைக்குப் புறம்பான இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பழமை வாய்ந்த மருத்துவ இதழான தி லான்செட் நடத்திய ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிதிக் குறைப்பு இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தைச் செலுத்தும். இறப்பு அபாயத்தில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள். குறிப்பாக ஆண்டுக்கு 7 இலட்சம் வரையான சிறுவர்கள் உயிரிழக்க நேரிடும்.இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் செயற்பட்டுவரும் யு.எஸ்.எய்ட் என்ற அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் திட்டங்களுக்கான நிதியுதவியில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை இரத்து செய்வதாக முன்னதாக ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், குறித்த செயற்பாட்டின் விளைவாக 'குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட பல நாடுகளில், உலகளாவிய தொற்றுநோய் அல்லது ஒரு பெரிய ஆயுத மோதல் என்பவற்றுக்கு நிகரான தாக்கம் ஏற்படும்'. அத்துடன், அமெரிக்க நிதி உதவித் திட்டம் நிறுத்தப்பட்டமையினால், பாதிக்கப்படக் கூடிய மக்களின் சுகாதார ரீதியான முன்னேற்றம், இரண்டு தசாப்தகால பின்னடைவைக் காணும் எனவும் அந்த செய்தி வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.