தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் செயற்படுத்துவோம் என்று பல்கலையின் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று (1) இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு பிரகடனம் செய்யப்பட்டது.
இரண்டாம் ஆண்டு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட பிரகடனங்களில் தெரிவிக்கையில்,
2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள், 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் ம் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இங்கு வருகை தந்திருக்கின்ற 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் சகோதர வாஞ்சையுடன் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளிவிலும் அவர்களை நாங்கள் பார்ப்போம் என்று பிரகடனப்படுத்துகிறோம்.
மேலும், முதலாம் வருட மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ புண்படுத்தக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாடையும் உங்கள் முன் பிரகடனப்படுத்துகிறோம்.
இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாமாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.வரலாற்று முக்கியத்துடன் இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.- என்றனர்.
புதிய மாணவர்களை பகிடிவதைகளுக்கு உட்படுத்த மாட்டோம் - தென்கிழக்குப் பல்கலையில் பிரகடனம் தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் செயற்படுத்துவோம் என்று பல்கலையின் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று (1) இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு பிரகடனம் செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களால் முன்வைக்கப்பட்ட பிரகடனங்களில் தெரிவிக்கையில், 2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள், 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் ம் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.இங்கு வருகை தந்திருக்கின்ற 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் சகோதர வாஞ்சையுடன் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளிவிலும் அவர்களை நாங்கள் பார்ப்போம் என்று பிரகடனப்படுத்துகிறோம்.மேலும், முதலாம் வருட மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ புண்படுத்தக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாடையும் உங்கள் முன் பிரகடனப்படுத்துகிறோம்.இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாமாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.வரலாற்று முக்கியத்துடன் இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.- என்றனர்.