• Nov 26 2024

மக்கள் ஆணைக்கு முன்னாள் எதிர் தரப்பினர் இன்று தோற்றுப் போயுள்ளனர் - அருண் ஹேமச்சந்திரா

Tharmini / Oct 15th 2024, 11:08 am
image

மூன்று அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைக்க முடியாது, ஆங்கிலம் பேசமுடியாதவராக அநுரகுமார இருப்பதால் இவர் ஜனாதிபதி யானால் சர்வதேச தொடர்புகளை பேணமுடியாத நாடாக இலங்கை மாறும் என, கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர் தரப்பினர் பிரச்சாரம் செய்து எம்மை தோற்கடிக்க முனைந்தார்கள். 

மக்கள் ஆணைக்கு முன்னாள் அவர்கள் இன்று தோற்றுப் போயுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.திருகோணமலை -தோப்பூரில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் போலிப் பிரச்சாரங்களை செய்தவர்களும், திருகோணமலை மாவட்டத்தின் பிரதான கட்சிகளில் முக்கிய பதவிகளை வகிக்கின்ற பலர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்களோடு இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கேட்டனர்.

அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்து விட்டோம்.கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட எவருக்கும் எமது கட்சியில் இடமளிக்கப் போவதில்லை.அதற்காகத்தான் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு ஆணையை தந்தார்கள்.

தான் ஜனாதிபதியானால் பல அரசியல்வாதிகள் ஓய்வெடுக்கும் நிலை ஏற்படும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார். இம்முறை 50 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.சிலர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்காக பெயர்களை கொடுத்துள்ளனர் எனினும் அவர்களால் தேசியப்பட்டியலிலும் செல்ல முடியாது.சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன கட்சியில் கேட்கிறார்கள் என்று கூட மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை போன்று இம்முறை நடைபெறவிருக்கின்ற பொது தேர்தலிலும் எமக்கு நிச்சயமாக வழங்குவார்கள். இதன் மூலம் ஊழலற்ற, சகல மக்களுக்கும் பொருத்தமான சிறந்த ஆட்சியை தேசிய மக்கள் சக்தி அமைக்கும் எனவும். குறிப்பிட்டார்.



மக்கள் ஆணைக்கு முன்னாள் எதிர் தரப்பினர் இன்று தோற்றுப் போயுள்ளனர் - அருண் ஹேமச்சந்திரா மூன்று அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைக்க முடியாது, ஆங்கிலம் பேசமுடியாதவராக அநுரகுமார இருப்பதால் இவர் ஜனாதிபதி யானால் சர்வதேச தொடர்புகளை பேணமுடியாத நாடாக இலங்கை மாறும் என, கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர் தரப்பினர் பிரச்சாரம் செய்து எம்மை தோற்கடிக்க முனைந்தார்கள். மக்கள் ஆணைக்கு முன்னாள் அவர்கள் இன்று தோற்றுப் போயுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.திருகோணமலை -தோப்பூரில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் போலிப் பிரச்சாரங்களை செய்தவர்களும், திருகோணமலை மாவட்டத்தின் பிரதான கட்சிகளில் முக்கிய பதவிகளை வகிக்கின்ற பலர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்களோடு இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கேட்டனர்.அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்து விட்டோம்.கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட எவருக்கும் எமது கட்சியில் இடமளிக்கப் போவதில்லை.அதற்காகத்தான் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு ஆணையை தந்தார்கள்.தான் ஜனாதிபதியானால் பல அரசியல்வாதிகள் ஓய்வெடுக்கும் நிலை ஏற்படும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார். இம்முறை 50 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டுள்ளது.சிலர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்காக பெயர்களை கொடுத்துள்ளனர் எனினும் அவர்களால் தேசியப்பட்டியலிலும் செல்ல முடியாது.சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன கட்சியில் கேட்கிறார்கள் என்று கூட மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை போன்று இம்முறை நடைபெறவிருக்கின்ற பொது தேர்தலிலும் எமக்கு நிச்சயமாக வழங்குவார்கள். இதன் மூலம் ஊழலற்ற, சகல மக்களுக்கும் பொருத்தமான சிறந்த ஆட்சியை தேசிய மக்கள் சக்தி அமைக்கும் எனவும். குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement