பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைத் தணிக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீரை அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு திருப்பி விடுவதற்கான கால்வாய்களை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் பயிர்கள் நாசமடைந்துள்ளதுடன்,
உடமைகள் சேதமாகியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் கணிசமான சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை நிர்வகிப்பதற்கான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த அழிவுக்குக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டில், மொரகஹகந்தவிலிருந்து அனுராதபுரம் மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக சுமார் 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையிலான கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
எவ்வாறெனினும், 2019 முதல் 2024 வரை, இந்த கால்வாய்களின் கட்டுமானம் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
எதிர்கால வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் வடமேல் மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மீதமுள்ள கால்வாய்களை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மைத்திரிபால வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைத் தணிக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதன்படி மொரகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீரை அனுராதபுரம் மற்றும் வடமேல் மாகாணத்திற்கு திருப்பி விடுவதற்கான கால்வாய்களை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் பயிர்கள் நாசமடைந்துள்ளதுடன்,உடமைகள் சேதமாகியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் கணிசமான சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை நிர்வகிப்பதற்கான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த அழிவுக்குக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.2019 ஆம் ஆண்டில், மொரகஹகந்தவிலிருந்து அனுராதபுரம் மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக சுமார் 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையிலான கால்வாய்கள் அமைக்கப்பட்டன.எவ்வாறெனினும், 2019 முதல் 2024 வரை, இந்த கால்வாய்களின் கட்டுமானம் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.எதிர்கால வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் வடமேல் மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மீதமுள்ள கால்வாய்களை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மைத்திரிபால வலியுறுத்தினார்.