மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் (Pravind Jugnauth) கைது செய்யப்பட்டு பணமோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று அந் நாட்டு அரசு நடத்தும் நிதிக் குற்ற ஆணையம் இன்று (16) அதிகாலை தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட அவர் மத்திய மொரிஷியஸில் உள்ள மோகா மாவட்டத்தில் உள்ள மோக்கா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார் என்று மொரிஷியஸ் நிதிக் குற்ற ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரோஸ்ஸே கூறியுள்ளார்.
ஜக்னாத்தின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நிதிக் குற்ற ஆணையத்தின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களைத் தொடர்ந்து, 114 மில்லியன் மொரீஷியஸ் ரூபாயை ($2.4 மில்லியன்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் மொரிஷிஸின் முன்னாள் பிரதமர் தற்காலிகமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று ஜுக்நாத்தின் சட்டதரணி ரவூப் குல்புல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் கூறினார்.
பணமோசடி குற்றச்சாட்டில் மொரிஷியஸின் முன்னாள் பிரதமர் கைது மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் (Pravind Jugnauth) கைது செய்யப்பட்டு பணமோசடி குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று அந் நாட்டு அரசு நடத்தும் நிதிக் குற்ற ஆணையம் இன்று (16) அதிகாலை தெரிவித்தது.கைது செய்யப்பட்ட அவர் மத்திய மொரிஷியஸில் உள்ள மோகா மாவட்டத்தில் உள்ள மோக்கா தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார் என்று மொரிஷியஸ் நிதிக் குற்ற ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரோஸ்ஸே கூறியுள்ளார்.ஜக்னாத்தின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நிதிக் குற்ற ஆணையத்தின் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களைத் தொடர்ந்து, 114 மில்லியன் மொரீஷியஸ் ரூபாயை ($2.4 மில்லியன்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, பணமோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் மொரிஷிஸின் முன்னாள் பிரதமர் தற்காலிகமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று ஜுக்நாத்தின் சட்டதரணி ரவூப் குல்புல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் கூறினார்.