• Feb 20 2025

Tharmini / Feb 16th 2025, 1:47 pm
image

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது.

எனினும், இன்றைய தினம் (16) இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதுடன், கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளர் பலி சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது.எனினும், இன்றைய தினம் (16) இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதுடன், கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement