திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.
2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட திருமதி சசிதேவி ஜலதீபன் இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமைகளை பாரமேற்றுக்கொண்டார்.
இவர் முன்னதாக திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவினதும்,பொலனறுவை மாவட்டத்தின் திபுலாகல பிரதேச செயலகப் பிரிவினதும் பிரதேச செயலாளராகவும், தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இளைஞர் விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினதும், நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சினதும் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ கண்காணிப்பு திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி மேலதிக செயலாளராக பதவியேற்பு. திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட திருமதி சசிதேவி ஜலதீபன் இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமைகளை பாரமேற்றுக்கொண்டார். இவர் முன்னதாக திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவினதும்,பொலனறுவை மாவட்டத்தின் திபுலாகல பிரதேச செயலகப் பிரிவினதும் பிரதேச செயலாளராகவும், தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, இளைஞர் விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினதும், நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சினதும் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும் மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ கண்காணிப்பு திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.