• Sep 20 2024

ஆபத்தான நிலையில் கோட்டை மேம்பாலம்! samugammedia

Chithra / Apr 17th 2023, 2:19 pm
image

Advertisement

தினமும் ஏராளமான மக்கள் பயணிக்கும் கோட்டை மேம்பாலம் தற்போது பல இடங்களில் சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு அப்பகுதி வர்த்தகர்கள் அறிவித்த போதும் பல தடவைகள் வருகைத்தந்து சேதமடைந்த இடங்களை அடையாளப்படுத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுவரையிலும் குறித்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெருமளவான மக்கள் பாலத்தில் ஏறியதாக வர்த்தகர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


விபத்து ஏற்படும் முன், பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏராளமான மக்கள் பாலத்தின் கீழ் மற்றும் மேல் வியாபாரம் செய்கின்றனர், மேலும் கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் பெருமளவான பயணிகள் பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஏற்படக்கூடிய விபத்தை அலட்சியப்படுத்தினால் அது பெரும் விபரீதமாக அமையும் எனவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆபத்தான நிலையில் கோட்டை மேம்பாலம் samugammedia தினமும் ஏராளமான மக்கள் பயணிக்கும் கோட்டை மேம்பாலம் தற்போது பல இடங்களில் சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு அப்பகுதி வர்த்தகர்கள் அறிவித்த போதும் பல தடவைகள் வருகைத்தந்து சேதமடைந்த இடங்களை அடையாளப்படுத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இதுவரையிலும் குறித்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெருமளவான மக்கள் பாலத்தில் ஏறியதாக வர்த்தகர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.விபத்து ஏற்படும் முன், பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏராளமான மக்கள் பாலத்தின் கீழ் மற்றும் மேல் வியாபாரம் செய்கின்றனர், மேலும் கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் பெருமளவான பயணிகள் பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறான நிலையில் ஏற்படக்கூடிய விபத்தை அலட்சியப்படுத்தினால் அது பெரும் விபரீதமாக அமையும் எனவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement