• Oct 19 2024

தலைமன்னார் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு! samugammedia

Tamil nila / May 12th 2023, 7:22 pm
image

Advertisement

தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிராமம் பகுதியில் சிறுமிகளை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மீதும் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் எதிர் வரும் 22 திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியளில் வைக்கவும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்புத்துள்ளதாக சட்டத்தரணி செ.டினேஸன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பாடசாலை  சிறுவர்களை கடத்த முற்படுவதாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் தலைமன்னார் பகுதியிலே பாடசாலை செல்கின்ற மூன்று மாணவிகளை கடைகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய வந்த இரு முகவர்கள்  சிறுவர்களுக்கு சொக்லேட் தருவதாக அழைத்ததாகவும் சிறுமிகள் அவர்களை கண்டு ஓடியதாகவும் அவர்கள் அந்த சிறுமிகளை தேடியதாகவும் கடத்த முற்பட்டதாகவும் கூறப்படு இரு நபர்கள் தலைமன்னார் பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்

இந்த பின்னனியிலே குறித்த மூன்று  சிறுமிகள் குறித்த வாகனத்தில் மூன்று நபர்கள் வந்ததாகவும் அந்த வாகனத்தில் வெளிநாட்டவர் ஒருவர் காணப்பட்டதாகவும் அவர்களுடைய முறைப்பாட்டில் தெரிவித்திருந்த போதிலும் ஊர்வாசிகளால் இரு நபர்கள் மாத்திரமே பிடிக்கப்பட்டு வாகனத்துடன் சேர்த்து தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக நேற்றைய தினம் முழுவதும் தலைமன்னார் பகுதியில் பதட்டமான நிலமையே காணப்பட்டதாகவும் 

இந்த பின்னனியில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்த பொலிஸார் குறித்த  சந்தேக நபர்கள் சார்பாக சிறுமிகளை கடத்த முயல்வது தொடர்பாக முறைப்பாடு எங்கேயேனும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக பல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து  மன்னார் பொலிஸ்நிலையத்திலே மூன்று முறைப்பாடுகள் சிறுவர்களை கடத்துதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்

 அதன் நிமித்தம் இன்றைய தினம் தலைமன்னார் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் முற்றாக முகங்களை மூடிய நிலையில் முற்படுத்திய போது அடையாள அணிவகுப்புக்கு ஏற்றவிதமாக முற்படுத்திய நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்க நீதவான் கட்டளையிட்டிருந்தார் 

இந்த வழக்கு அழைக்கப்பட்ட அடுத்த கனமே மன்னார் பொலிஸாரும் மூன்று வழக்குகளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர் குறித்த மூன்று வழக்கும் 2023/05/06 திகதி பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 வயது மாணவனை வெள்ளை வானில் சொக்லேட் தருவதாக தெரிவித்ததாகவும் கடத்த முயற்சித்தகவும் முறைப்பாடு மன்னார் பொலிஸ்நிலையத்தில் பதிவாகியிருந்தது அந்த முறைப்பாட்டுக்கும் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டு  இந்த இரு சந்தேக நபர்களும் அந்த வழக்கிலும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையிலும் அடையாள அணிவகுப்புக்காக இரு சந்தேக நபர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்

அதன் பின்னர் 2023/05/08 திகதி ஓலைத்தொடுவாய் பகுதியில் 11 வயது சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் மன்னார் YMCA பகுதியில் சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் மேலும் இரண்டு வழக்குகளாகவும் மொத்தமாக சந்தேக நபர்கள் மீதும் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன ஒரு வழக்கு தலைமன்னார் பொலிஸாராலும் மூன்று வழகுகள் மன்னார் பொலிஸாராலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் மூன்றாவது வழக்கானது ஐந்தாம் மாதம் 22 திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்பு உட்படுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது

தொடர்சியாக பாடசாலைக்கு செல்கின்ற சிறுவர்களை கடத்த முற்படுவதாக தகவல் முறைப்பாடுகள் கிடைக்க பெறுகின்றமையால் மன்னார் மாவட்டத்தில் வசிக்கின்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கும் வெளியே அனுப்புவதற்கும் மிகவும் அச்சமான சூழ்நிலையே காணப்படுவதாகவும் ஆரம்பத்தில் வதந்தியாக பரப்பப்பட்ட விடயம் தற்போது முறைப்பாடாக பதியப்பட்டு இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த விடயத்தில் குறித்த சந்தேக நபர்கள் ஏன் எதற்காக இவ்வாறு நடந்து  கொண்டார்கள் இல்லை இவர்களுக்கு பின்னால் யாரும் இருக்கின்றார்களா உண்மையில் இவர்கள் சிறுவர்களை கடத்த முயன்றார்களா என்பதையும்  இதற்கு மூல காரணமாக உள்ள சந்தேக நபர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படவேண்டும் இதற்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்பதை பொலிஸார் அறிய வேண்டும் என அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்

தலைமன்னார் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது நான்கு வழக்குகள் பதிவு samugammedia தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிராமம் பகுதியில் சிறுமிகளை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மீதும் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன் எதிர் வரும் 22 திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியளில் வைக்கவும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்புத்துள்ளதாக சட்டத்தரணி செ.டினேஸன் தெரிவித்துள்ளார்அவர் மேலும் தெரிவிக்கையில்மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பாடசாலை  சிறுவர்களை கடத்த முற்படுவதாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் தலைமன்னார் பகுதியிலே பாடசாலை செல்கின்ற மூன்று மாணவிகளை கடைகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய வந்த இரு முகவர்கள்  சிறுவர்களுக்கு சொக்லேட் தருவதாக அழைத்ததாகவும் சிறுமிகள் அவர்களை கண்டு ஓடியதாகவும் அவர்கள் அந்த சிறுமிகளை தேடியதாகவும் கடத்த முற்பட்டதாகவும் கூறப்படு இரு நபர்கள் தலைமன்னார் பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்இந்த பின்னனியிலே குறித்த மூன்று  சிறுமிகள் குறித்த வாகனத்தில் மூன்று நபர்கள் வந்ததாகவும் அந்த வாகனத்தில் வெளிநாட்டவர் ஒருவர் காணப்பட்டதாகவும் அவர்களுடைய முறைப்பாட்டில் தெரிவித்திருந்த போதிலும் ஊர்வாசிகளால் இரு நபர்கள் மாத்திரமே பிடிக்கப்பட்டு வாகனத்துடன் சேர்த்து தலைமன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.இதன் காரணமாக நேற்றைய தினம் முழுவதும் தலைமன்னார் பகுதியில் பதட்டமான நிலமையே காணப்பட்டதாகவும் இந்த பின்னனியில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்த பொலிஸார் குறித்த  சந்தேக நபர்கள் சார்பாக சிறுமிகளை கடத்த முயல்வது தொடர்பாக முறைப்பாடு எங்கேயேனும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக பல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து  மன்னார் பொலிஸ்நிலையத்திலே மூன்று முறைப்பாடுகள் சிறுவர்களை கடத்துதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார் அதன் நிமித்தம் இன்றைய தினம் தலைமன்னார் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்து மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் முற்றாக முகங்களை மூடிய நிலையில் முற்படுத்திய போது அடையாள அணிவகுப்புக்கு ஏற்றவிதமாக முற்படுத்திய நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்க நீதவான் கட்டளையிட்டிருந்தார் இந்த வழக்கு அழைக்கப்பட்ட அடுத்த கனமே மன்னார் பொலிஸாரும் மூன்று வழக்குகளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர் குறித்த மூன்று வழக்கும் 2023/05/06 திகதி பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 11 வயது மாணவனை வெள்ளை வானில் சொக்லேட் தருவதாக தெரிவித்ததாகவும் கடத்த முயற்சித்தகவும் முறைப்பாடு மன்னார் பொலிஸ்நிலையத்தில் பதிவாகியிருந்தது அந்த முறைப்பாட்டுக்கும் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டு  இந்த இரு சந்தேக நபர்களும் அந்த வழக்கிலும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையிலும் அடையாள அணிவகுப்புக்காக இரு சந்தேக நபர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்அதன் பின்னர் 2023/05/08 திகதி ஓலைத்தொடுவாய் பகுதியில் 11 வயது சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் மன்னார் YMCA பகுதியில் சிறுமியை கடத்த முற்பட்டதாகவும் மேலும் இரண்டு வழக்குகளாகவும் மொத்தமாக சந்தேக நபர்கள் மீதும் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன ஒரு வழக்கு தலைமன்னார் பொலிஸாராலும் மூன்று வழகுகள் மன்னார் பொலிஸாராலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் மூன்றாவது வழக்கானது ஐந்தாம் மாதம் 22 திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்பு உட்படுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுதொடர்சியாக பாடசாலைக்கு செல்கின்ற சிறுவர்களை கடத்த முற்படுவதாக தகவல் முறைப்பாடுகள் கிடைக்க பெறுகின்றமையால் மன்னார் மாவட்டத்தில் வசிக்கின்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கும் வெளியே அனுப்புவதற்கும் மிகவும் அச்சமான சூழ்நிலையே காணப்படுவதாகவும் ஆரம்பத்தில் வதந்தியாக பரப்பப்பட்ட விடயம் தற்போது முறைப்பாடாக பதியப்பட்டு இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே குறித்த விடயத்தில் குறித்த சந்தேக நபர்கள் ஏன் எதற்காக இவ்வாறு நடந்து  கொண்டார்கள் இல்லை இவர்களுக்கு பின்னால் யாரும் இருக்கின்றார்களா உண்மையில் இவர்கள் சிறுவர்களை கடத்த முயன்றார்களா என்பதையும்  இதற்கு மூல காரணமாக உள்ள சந்தேக நபர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படவேண்டும் இதற்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்பதை பொலிஸார் அறிய வேண்டும் என அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement