புத்தளத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் கீழ் உள்ள குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நால்வரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் ராஜபக்ஷ கொஸ்வத்த பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் சார்ஜன்ட் பஸ்னாயக்க கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் கான்ஸ்டபிள் அபேசிங்க தொடுவாவ பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் கான்ஸ்டபிள் சேனநாயக்க ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி புத்தளம் - ஆனமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கத்தை தேடி அகழ்வு பணியில் ஈடுபட்டனர் என்று இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தங்கம் வேட்டையில் ஈடுபட்ட பொலிஸார் நால்வருக்கு கிடைத்த சன்மானம். புத்தளத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் கீழ் உள்ள குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நால்வரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தெரிவித்தார்.இதன் அடிப்படையில், குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் ராஜபக்ஷ கொஸ்வத்த பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் சார்ஜன்ட் பஸ்னாயக்க கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் கான்ஸ்டபிள் அபேசிங்க தொடுவாவ பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் கான்ஸ்டபிள் சேனநாயக்க ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி புத்தளம் - ஆனமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கத்தை தேடி அகழ்வு பணியில் ஈடுபட்டனர் என்று இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.