நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில், நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது,
மொத்தமாக 40 வாகனங்கள் பரிசோதனை செய்ததில் 22 வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையில் ஈடுபடும் 10 பேருந்துக்களும், 8 தனியார் பேருந்துக்களும் 4 லொறிகளும் அடங்குவதாக தெரிவித்தனர் .
மேலும் அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது.
பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நுவரெலியாவில் வாகனங்கள் தீவிர பரிசோதனை 22 வாகன சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.நேற்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில், நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது,மொத்தமாக 40 வாகனங்கள் பரிசோதனை செய்ததில் 22 வாகனங்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இதில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையில் ஈடுபடும் 10 பேருந்துக்களும், 8 தனியார் பேருந்துக்களும் 4 லொறிகளும் அடங்குவதாக தெரிவித்தனர் .மேலும் அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது. பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.