• Nov 22 2024

இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம் - இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு

Chithra / Jan 20th 2024, 1:35 pm
image

 

இலங்கையர்களை மனித கடத்தலுக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரில் இந்தியர்கள் 4 பேருக்கு எதிராக இந்திய தேசியப் புலனாய்வு சேவை பெங்களூர் நீதிமன்றில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு 39 இலங்கையர்களை, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முகமது இம்ரான் கான் என்ற இம்ரான், தலைமறைவாகியுள்ள சீனி அபுல் கான், முகமது இப்ராகிம் என்ற அகமது மற்றும் புதுமடம் இம்ரான் என்ற ஹாஜியார் ஆகியோர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடத்தல், சிறைப்படுத்தல் மற்றும் சதி தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், இலங்கையர்கள் 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக பொய் வாக்குறுதி அளித்து தமிழகம் வழியாக மங்களூருவுக்கு கடத்தி சென்றனர் பின்னர் அவர்கள் மங்களூருவில் உள்ள பல்வேறு தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதன்போதே அவர்கள் கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கையர்களிடம் இருந்தும், பின்னர் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் பெரும் தொகையை வசூலித்துள்ளனர் என்றும் தேசிய புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம் - இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு  இலங்கையர்களை மனித கடத்தலுக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரில் இந்தியர்கள் 4 பேருக்கு எதிராக இந்திய தேசியப் புலனாய்வு சேவை பெங்களூர் நீதிமன்றில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.2021 ஆம் ஆண்டு 39 இலங்கையர்களை, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முகமது இம்ரான் கான் என்ற இம்ரான், தலைமறைவாகியுள்ள சீனி அபுல் கான், முகமது இப்ராகிம் என்ற அகமது மற்றும் புதுமடம் இம்ரான் என்ற ஹாஜியார் ஆகியோர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடத்தல், சிறைப்படுத்தல் மற்றும் சதி தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்டவர்கள், இலங்கையர்கள் 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக பொய் வாக்குறுதி அளித்து தமிழகம் வழியாக மங்களூருவுக்கு கடத்தி சென்றனர் பின்னர் அவர்கள் மங்களூருவில் உள்ள பல்வேறு தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.இதன்போதே அவர்கள் கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கையர்களிடம் இருந்தும், பின்னர் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் பெரும் தொகையை வசூலித்துள்ளனர் என்றும் தேசிய புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement