பெண் ஒருவர் உள்ளாடைக்குள் வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் பொருட்டு பொலிஸாரினால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக யுக்திய எனும் மகுடத்துடன் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குறித்த சோதனை நடவடிக்கையில் ஆயிரக்கணக்காணோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், நேற்றையதினம், கொட்டாவெஹர பொலிஸார் மேற்கொண்ட யுக்திய விசேட சுற்றிவளைப்பின் போது, பேருந்துகளையும் வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது, பேருந்து ஒன்றில் பயணித்த பெண்ணின் சந்தேகத்திற்குரிய நடத்தையின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்
இந்நிலையில் வெடிபொருட்களை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவெஹர பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி தலத்துய பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 165 கிராம் கறுப்பு துப்பாக்கி, 605 கிராம் அம்மோனியா வெடிபொருட்கள், 2 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 2 10 அடி சர்வீஸ் கயிறுகள் மற்றும் 20 புகை துளிகள் என்பன இதன்போது மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளாடைக்குள் வெடிபொருட்களை வைத்திருந்த பெண் கைது. samugammedia பெண் ஒருவர் உள்ளாடைக்குள் வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் பொருட்டு பொலிஸாரினால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக யுக்திய எனும் மகுடத்துடன் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குறித்த சோதனை நடவடிக்கையில் ஆயிரக்கணக்காணோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில், நேற்றையதினம், கொட்டாவெஹர பொலிஸார் மேற்கொண்ட யுக்திய விசேட சுற்றிவளைப்பின் போது, பேருந்துகளையும் வழிமறித்து சோதனையிட்டனர்.இதன்போது, பேருந்து ஒன்றில் பயணித்த பெண்ணின் சந்தேகத்திற்குரிய நடத்தையின் அடிப்படையில் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்இந்நிலையில் வெடிபொருட்களை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவெஹர பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி தலத்துய பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 165 கிராம் கறுப்பு துப்பாக்கி, 605 கிராம் அம்மோனியா வெடிபொருட்கள், 2 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 2 10 அடி சர்வீஸ் கயிறுகள் மற்றும் 20 புகை துளிகள் என்பன இதன்போது மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.