வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது.
வவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர்கல்வி நிலையத்தின் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் நான்காவது விருது வழங்கும் விழாவானது நேற்று (22) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது
வவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர்கல்வி நிலையத்தின் பணிப்பாளர் சூசை அன்ரனி யூட் டியோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஸ்ர பேராசிரியருமாகிய அருளம்பலம்அற்புதராஜா கரங்களால் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முயற்சியான்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும், ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல், ஆரம்பப் பிள்ளைப்பருவ டிப்ளோமா, ஆங்கில உயர் டிப்ளோமா கற்கைகளை மேற்கொண்டு சித்திபெற்ற மாணவர்களுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நான்காவது விருது வழங்கும் விழா வவுனியாப் பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது.வவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர்கல்வி நிலையத்தின் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் நான்காவது விருது வழங்கும் விழாவானது நேற்று (22) வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதுவவுனியாப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் தொடர்கல்வி நிலையத்தின் பணிப்பாளர் சூசை அன்ரனி யூட் டியோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தரும் சிரேஸ்ர பேராசிரியருமாகிய அருளம்பலம்அற்புதராஜா கரங்களால் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.முயற்சியான்மையும் சிறு வியாபார முகாமைத்துவமும், ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல், ஆரம்பப் பிள்ளைப்பருவ டிப்ளோமா, ஆங்கில உயர் டிப்ளோமா கற்கைகளை மேற்கொண்டு சித்திபெற்ற மாணவர்களுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.