• Dec 18 2024

கிண்ணியா விவசாயிகளுக்கு இலவச உர விநியோகம்

Chithra / Dec 18th 2024, 2:34 pm
image


புதிய அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட, இலவச உர விநியோகம் இன்று(18) கிண்ணியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆரம்ப கட்டமாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மஜித் நகர் கிராம சேவகர் பிரிவில், குரங்குபாஞ்சான், வெள்ளம்குளம் மற்றும் தீனேரி ஆகி விவசாய சம்மேளன பிரிவு விவசாயிகளுக்கு MOP பசளை வழங்கி வைக்கப்பட்டது.

பெரும்போக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ கிராம் வீதமும், சிறு போக விவசாயிகளுக்கு 12 கிலோ கிராம் வீதமும் வழங்கி வைக்கப்பட்டது என கிண்ணியா கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். கே. அஜித்கான் தெரிவித்தார்.

கிண்ணியா கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 15 விவசாய சம்மேளன பிரிவுகள் இருப்பதாகவும், அனைத்து பிரிவு விவசாயிகளுக்கும் கட்டம் கட்டமாக இலவச MOP உரம் வழங்கி வைக்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார். 


கிண்ணியா விவசாயிகளுக்கு இலவச உர விநியோகம் புதிய அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்ட, இலவச உர விநியோகம் இன்று(18) கிண்ணியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.ஆரம்ப கட்டமாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மஜித் நகர் கிராம சேவகர் பிரிவில், குரங்குபாஞ்சான், வெள்ளம்குளம் மற்றும் தீனேரி ஆகி விவசாய சம்மேளன பிரிவு விவசாயிகளுக்கு MOP பசளை வழங்கி வைக்கப்பட்டது.பெரும்போக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ கிராம் வீதமும், சிறு போக விவசாயிகளுக்கு 12 கிலோ கிராம் வீதமும் வழங்கி வைக்கப்பட்டது என கிண்ணியா கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். கே. அஜித்கான் தெரிவித்தார்.கிண்ணியா கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 15 விவசாய சம்மேளன பிரிவுகள் இருப்பதாகவும், அனைத்து பிரிவு விவசாயிகளுக்கும் கட்டம் கட்டமாக இலவச MOP உரம் வழங்கி வைக்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement