பளை- பச்சிலைப்பள்ளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் ஒழுங்குபடுத்தலில் கிளாலி பகுதி மக்களுக்கு நேற்றையதினம்(31) இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதனின் நேரடி வழிப்படுத்தலிலே இந்த இலவச மருத்துவ சிகிச்சை முகாம் செயற்படுத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் பல மக்கள் மருத்துவ சேவையை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் இவ்வாறான தொடர்ச்சியான மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கிளாலியில் இடம்பெற்ற இலவச மருத்துவ சேவை முகாம். பளை- பச்சிலைப்பள்ளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் ஒழுங்குபடுத்தலில் கிளாலி பகுதி மக்களுக்கு நேற்றையதினம்(31) இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதனின் நேரடி வழிப்படுத்தலிலே இந்த இலவச மருத்துவ சிகிச்சை முகாம் செயற்படுத்தப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் பல மக்கள் மருத்துவ சேவையை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் இவ்வாறான தொடர்ச்சியான மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார்.