பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் மோதியதில் தாயும் மகனும் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் நேற்று (31) இரவு பெந்தோட்டை கடற்கரையில் இடம்பெற்ற வாணவேடிக்கையை கண்டுகளிக்கத்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயது குழந்தையின் இடது கை பகுதி காயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடிப்படை சிகிச்சையின் பின்னர் தாயும் மகனும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெந்தோட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்குச் சென்ற தாய்க்கும் மகனுக்கும் ஏற்பட்ட துயரம் பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் மோதியதில் தாயும் மகனும் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் நேற்று (31) இரவு பெந்தோட்டை கடற்கரையில் இடம்பெற்ற வாணவேடிக்கையை கண்டுகளிக்கத்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயது குழந்தையின் இடது கை பகுதி காயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அடிப்படை சிகிச்சையின் பின்னர் தாயும் மகனும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெந்தோட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.