புத்தள மக்கள் மலர்ந்திருக்கும் 2025ஆம் ஆண்டை : மகிழ்வுடன் வரவேற்பு மலர்ந்திருக்கும் 2025ம் ஆண்டை வரவேற்கும் முகமாக மக்கள் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுப்பட்டனர்.இந்த நிலையில் புத்தளம் புனித சாந்த மரியா ஆலயத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.நீராடி புத்தாடைகளை அணிந்து மக்கள் ஆலயத்திற்கு வருகைத் தந்து திருப்பலியில் கலந்து கொண்டனர்.ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மலன் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.இதன்போது மலர்ந்திருக்கும் புத்தாண்டு வாழ்துகளை பரிமாரிக்கொண்டனர்.