இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த வருடம் 1.515 டிரில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
வருடமொன்றில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும்.
2024ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய 1.533 இலட்சம் கோடி ரூபா வருமான இலக்கை இலங்கை சுங்கம் அடைய முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2024 ஆம் ஆண்டில் 49.66% வளர்ச்சியை எட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 10,654.16 அலகுகளாகப் பதிவாகியிருந்த அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், அவ்வாண்டின் இறுதியில் 15,944.61 அலகுகளாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.69 ட்ரில்லின்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதனை வருமானத்தை பதிவு செய்த இலங்கை சுங்கம் இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது.இதன்படி, கடந்த வருடம் 1.515 டிரில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.வருடமொன்றில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாகும்.2024ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய 1.533 இலட்சம் கோடி ரூபா வருமான இலக்கை இலங்கை சுங்கம் அடைய முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2024 ஆம் ஆண்டில் 49.66% வளர்ச்சியை எட்டியுள்ளது.2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 10,654.16 அலகுகளாகப் பதிவாகியிருந்த அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், அவ்வாண்டின் இறுதியில் 15,944.61 அலகுகளாக உயர்ந்துள்ளது.இதேவேளை, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.69 ட்ரில்லின்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.