• Aug 26 2025

இந்திய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி நாளை முதல் நடைமுறை - அமெரிக்க அறிவிப்பு!

shanuja / Aug 26th 2025, 11:00 am
image

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25 வீத அபராத வரி  நாளை (27) ஆம் திகதி முதல்  நடைமுறைக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய - அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ஆம் திகதியிலிருந்து  நடைமுறையில் உள்ளது. 


ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி அமலுக்கு வருமா? நிறுத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இந்நிலையில் இன்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி  நாளை அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது.

இந்திய இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி நாளை முதல் நடைமுறை - அமெரிக்க அறிவிப்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25 வீத அபராத வரி  நாளை (27) ஆம் திகதி முதல்  நடைமுறைக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய - அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ஆம் திகதியிலிருந்து  நடைமுறையில் உள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி அமலுக்கு வருமா நிறுத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்நிலையில் இன்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி  நாளை அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement