நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போதைக்கு 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி வழங்கப்படுகின்றது.
அந்தப் பட்டியலில் இன்னும் சில நாடுகளை உள்ளடக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.
குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், வரவு செலவுத் திட்டம் நிறைவடைய முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு இலவச இலங்கை விசா அமைச்சர் அறிவிப்பு நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைக்கு 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலங்கை வருவதற்கான இலவச விசா வசதி வழங்கப்படுகின்றது.அந்தப் பட்டியலில் இன்னும் சில நாடுகளை உள்ளடக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், வரவு செலவுத் திட்டம் நிறைவடைய முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.