• Oct 19 2024

இலவச கோதுமை மா வழங்கல்; முதியவர்கள் நால்வர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Mar 31st 2023, 10:32 am
image

Advertisement

பாகிஸ்தான் அரசானது கடந்த சில ஆண்டுகளாகப் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.


குறிப்பாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் `ரமழான்` மாதத்தையொட்டி பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோகிராம் கோதுமை மாவினை இலவசமாக வழங்க, அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.


இந்நிலையில் கோதுமை மா மூட்டைகளுடன், பெஷாவர் நகரம் வழியாக சென்ற லொறியை விரட்டி சென்று பிடித்த பொதுமக்கள், லொறிமீது முண்டியடித்து ஏறி அனைத்து மூட்டைகளையும் திருடிச் சென்றனர்.


இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இதுவரை 4 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச கோதுமை மா வழங்கல்; முதியவர்கள் நால்வர் உயிரிழப்பு samugammedia பாகிஸ்தான் அரசானது கடந்த சில ஆண்டுகளாகப் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.குறிப்பாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் `ரமழான்` மாதத்தையொட்டி பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோகிராம் கோதுமை மாவினை இலவசமாக வழங்க, அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் கோதுமை மா மூட்டைகளுடன், பெஷாவர் நகரம் வழியாக சென்ற லொறியை விரட்டி சென்று பிடித்த பொதுமக்கள், லொறிமீது முண்டியடித்து ஏறி அனைத்து மூட்டைகளையும் திருடிச் சென்றனர்.இதன்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இதுவரை 4 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement