• Aug 18 2025

25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி; திருப்பி கொடுக்காததால் குடும்பப்பெண் உயிர்மாய்ப்பு!

shanuja / Aug 16th 2025, 9:17 pm
image

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். 


பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த  43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


குறித்த பெண்ணின் நண்பி ஒருவர் தனது மகனின் திருமண செலவிற்காக  அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். 


இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.


இந்நிலையில் நேற்றையதினமும் அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுத்துள்ளார்.


நகையை வழங்கவில்லை என்ற மனவிரக்தியில் குறித்த பெண் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.


பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


உயிர்மாய்ப்பு சாட்சிகளை நெறிப்படுத்திய இளவாலை பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

25 பவுண் நகையை வாங்கி ஏமாற்றிய நண்பி; திருப்பி கொடுக்காததால் குடும்பப்பெண் உயிர்மாய்ப்பு நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த  43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணின் நண்பி ஒருவர் தனது மகனின் திருமண செலவிற்காக  அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார். இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்றையதினமும் அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார். அவர் அந்த நகையை வழங்க மறுத்துள்ளார்.நகையை வழங்கவில்லை என்ற மனவிரக்தியில் குறித்த பெண் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உயிர்மாய்ப்பு சாட்சிகளை நெறிப்படுத்திய இளவாலை பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement