• Oct 03 2026

சுருக்குவலை முதல் கடலட்டை பிடிப்பு வரை... வடமராட்சி கிழக்கில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி!

Chithra / Oct 2nd 2026, 8:32 pm
image


யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 300 படகுகளுக்கு மாத்திரமே கடலட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 600க்கும் மேற்பட்ட படகுகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் முன்னெடுக்கப்படுவதாக வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் இன்று (02) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 


வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சுருக்குவலை பயன்படுத்துதல், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், இலைக்குழிகளை அமைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.


அத்துடன், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


குறிப்பாக வடமராட்சி கிழக்கில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்பில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் கரையோரமாகச் சென்று வருவதாகவும், கடலட்டை பிடிக்கும் தொழிலுக்கு காலை 6 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதிக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கரையோரப் பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


எனவே, இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுருக்குவலை முதல் கடலட்டை பிடிப்பு வரை. வடமராட்சி கிழக்கில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 300 படகுகளுக்கு மாத்திரமே கடலட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 600க்கும் மேற்பட்ட படகுகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் முன்னெடுக்கப்படுவதாக வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று (02) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சுருக்குவலை பயன்படுத்துதல், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், இலைக்குழிகளை அமைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.அத்துடன், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.குறிப்பாக வடமராட்சி கிழக்கில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்பில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் கரையோரமாகச் சென்று வருவதாகவும், கடலட்டை பிடிக்கும் தொழிலுக்கு காலை 6 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப்பகுதிக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கரையோரப் பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே, இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement