• Sep 20 2024

துணைவேந்தர் பதவி முதல் அனைத்து இடங்களிலும் அரசியல் கலப்பற்ற நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - சிவரூபன்! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 7:51 pm
image

Advertisement

துணைவேந்தர் பதவி முதல் அனைத்து இடங்களிலும் அரசியல் கலப்பற்ற நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இன்று  யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளை விட  வரப்போகும் பபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்  பெரிய அடக்குமுறையாக இருக்கப்போவதில்லை. 

பழைய பதவிகளை வைத்துக்கொண்டு  மீண்டுமொரு கிளர்ச்சி மற்றும் முற்றுகைப் போராட்டம்  வரலாம்  என்பதைப் பெரிதாக்கி  பெரும்பான்மை இனத்தவரினதும் அவர்கள் சார் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இவ்வாறான சட்டங்களை அரசு முன்னகர்த்த முயற்சிக்கின்றது.

நாம் இவை தொடர்பில் தமிழ் மக்கள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விடுத்து சிங்கள  அடிமட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை முதல் இதற்கெதிராக திருப்ப வேண்டும். அதன் பின்னால் நாங்கள் அணி திரள்வதே பொருத்தமானதாயிருக்கும்.

இதை விட தொழிற்சங்கங்கள் ஒவ்வொன்றும் மத்தியில் வேறு விதமாகவும் அடி மட்டத்தில் வேறு விதமாகவும் செயற்படுகின்றன.  அங்குள்ள தொழிற்சங்கங்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் பின்புலததிலும்  நிகழ்ச்சி நிரலிலும் இருக்கின்றனவே தவிர  சாதாரண மக்கள் மற்றும் தொழிலாளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் எந்தவொரு கரிசனையையும்  காட்டுவதில்லை

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்பட முற்படுமாயின் இவ்வாறான சட்டங்களை இலகுவாக எதிர்க்க முடியும்.

இவற்றை விட காலத்திற்கு காலம் வரும் அரசியல் வாதிகள் வாக்காளர்ளை திருப்திபடுத்துமுகமாக முறையற்ற தொழில் நியமனங்களை வழங்குகின்றனர். எனவே அரசியல் கலப்பற்ற அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். இவற்றை துணைவேந்தர் பதவி முதல் அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

துணைவேந்தர் பதவி முதல் அனைத்து இடங்களிலும் அரசியல் கலப்பற்ற நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - சிவரூபன் samugammedia துணைவேந்தர் பதவி முதல் அனைத்து இடங்களிலும் அரசியல் கலப்பற்ற நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் சிவரூபன் தெரிவித்துள்ளார்.இன்று  யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளை விட  வரப்போகும் பபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்  பெரிய அடக்குமுறையாக இருக்கப்போவதில்லை. பழைய பதவிகளை வைத்துக்கொண்டு  மீண்டுமொரு கிளர்ச்சி மற்றும் முற்றுகைப் போராட்டம்  வரலாம்  என்பதைப் பெரிதாக்கி  பெரும்பான்மை இனத்தவரினதும் அவர்கள் சார் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இவ்வாறான சட்டங்களை அரசு முன்னகர்த்த முயற்சிக்கின்றது.நாம் இவை தொடர்பில் தமிழ் மக்கள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விடுத்து சிங்கள  அடிமட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை முதல் இதற்கெதிராக திருப்ப வேண்டும். அதன் பின்னால் நாங்கள் அணி திரள்வதே பொருத்தமானதாயிருக்கும்.இதை விட தொழிற்சங்கங்கள் ஒவ்வொன்றும் மத்தியில் வேறு விதமாகவும் அடி மட்டத்தில் வேறு விதமாகவும் செயற்படுகின்றன.  அங்குள்ள தொழிற்சங்கங்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் பின்புலததிலும்  நிகழ்ச்சி நிரலிலும் இருக்கின்றனவே தவிர  சாதாரண மக்கள் மற்றும் தொழிலாளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் எந்தவொரு கரிசனையையும்  காட்டுவதில்லைஅனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்பட முற்படுமாயின் இவ்வாறான சட்டங்களை இலகுவாக எதிர்க்க முடியும்.இவற்றை விட காலத்திற்கு காலம் வரும் அரசியல் வாதிகள் வாக்காளர்ளை திருப்திபடுத்துமுகமாக முறையற்ற தொழில் நியமனங்களை வழங்குகின்றனர். எனவே அரசியல் கலப்பற்ற அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். இவற்றை துணைவேந்தர் பதவி முதல் அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement