நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு டீசல் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி வருகை தரவுள்ள டீசல் கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
டீசல் கப்பலைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் மற்றுமொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பல் மூலம் மொத்தம் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த எரிபொருள் தொகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் மூலம் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் வழமை போன்று தடையின்றி முன்னெடுக்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
தடையின்றி எரிபொருள் விநியோகம்: அடுத்தடுத்து வரவுள்ள கப்பல்கள் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு டீசல் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி வருகை தரவுள்ள டீசல் கப்பலில் 9,500 மெற்றிக் தொன் டீசல் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.டீசல் கப்பலைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் மற்றுமொரு பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. இந்தக் கப்பல் மூலம் மொத்தம் 35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் இந்த எரிபொருள் தொகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் வழமை போன்று தடையின்றி முன்னெடுக்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.