• Sep 19 2024

இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை தவறவிட்ட ஜி-20 நாடுகள்! – சர்வதேச மன்னிப்பு சபை SamugamMedia

Chithra / Mar 12th 2023, 10:25 am
image

Advertisement

கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில் இக்கடன் நெருக்கடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜி-20 நாடுகள் அமைப்பு செயற்திறன்மிக்க வகையில் ஒருங்கிணைந்தால் இலங்கைக்கு அவசியமான கடனையும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளது.

அதேவேளை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை தவறவிட்ட ஜி-20 நாடுகள் – சர்வதேச மன்னிப்பு சபை SamugamMedia கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.எவ்வாறாயினும் 22 மில்லியன் மக்களின் உரிமைகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில் இக்கடன் நெருக்கடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளது.ஜி-20 நாடுகள் அமைப்பு செயற்திறன்மிக்க வகையில் ஒருங்கிணைந்தால் இலங்கைக்கு அவசியமான கடனையும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதுகாத்து வலுப்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளது.அதேவேளை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியடைவதை முன்னிறுத்தி சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலாக வெவ்வேறு தரப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement