• Apr 15 2026

வாகனத்தில் சூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட கஞ்சா - வவுனியாவில் இருவர் கைது

Chithra / Feb 10th 2026, 8:56 pm
image

 

22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.  


வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து அதில் சோதனையில் ஈடுபட்டனர்.  


இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது. 


குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. 


கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வாகனத்தில் சூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட கஞ்சா - வவுனியாவில் இருவர் கைது  22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.  வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து அதில் சோதனையில் ஈடுபட்டனர்.  இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது. குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement