• Oct 14 2026

மழைக்காலத்தில் டெங்கு அபாயம் அதிகரிக்கலாம்; திருகோணமலை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை!

dorin / Oct 14th 2026, 3:18 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் மழைக்காலத்தின்போது அதிகரிக்கக்கூடிய டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார்.

டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடர்புடைய அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க தெரிவித்தார்.

டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்த பின்னரோ அல்லது ஆபத்து அதிகரித்த பின்னரோ அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பயனில்லை எனவும், முன்கூட்டியே உரிய தீர்மானங்களை எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்த அணுகுமுறையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுகாதார அறிக்கைகளின்படி, திருகோணமலை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகள் டெங்கு நோய் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, கிண்ணியா, மூதூர் மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய பகுதிகளும் டெங்கு நோய் அபாயம் நிலவும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், 2026ஆம் ஆண்டில் டெங்கு நோய் காரணமாக ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான முன்மொழிவுகளும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இலங்கைப் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மழைக்காலத்தில் டெங்கு அபாயம் அதிகரிக்கலாம்; திருகோணமலை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் மழைக்காலத்தின்போது அதிகரிக்கக்கூடிய டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொறுப்புகளைப் புறக்கணித்துச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகப் பதவி நிலை பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார்.டெங்கு நோய்ப் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தொடர்புடைய அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்படுவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க தெரிவித்தார்.டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்த பின்னரோ அல்லது ஆபத்து அதிகரித்த பின்னரோ அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பயனில்லை எனவும், முன்கூட்டியே உரிய தீர்மானங்களை எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்த அணுகுமுறையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.சுகாதார அறிக்கைகளின்படி, திருகோணமலை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகள் டெங்கு நோய் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, கிண்ணியா, மூதூர் மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய பகுதிகளும் டெங்கு நோய் அபாயம் நிலவும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.மேலும், 2026ஆம் ஆண்டில் டெங்கு நோய் காரணமாக ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்போது, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பான முன்மொழிவுகளும் கலந்துரையாடப்பட்டன.இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இலங்கைப் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement