முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (INTERPOL) ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்குச் சொந்தமான நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இன்டர்போல் ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பிடியாணையைப் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதி, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-சேர்ட்டுகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட வேண்டிய நிதி, தேர்தல் நடவடிக்கைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்டர்போல் வலையில் சிக்குவாரா பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (INTERPOL) ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்குச் சொந்தமான நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.அதன்படி, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இன்டர்போல் ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பிடியாணையைப் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.2014 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதி, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-சேர்ட்டுகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட வேண்டிய நிதி, தேர்தல் நடவடிக்கைகளுக்காக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகச் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.