• Oct 14 2026

சிவப்பு எச்சரிக்கைக்குள் இலங்கை; நாளை அதிகாலை வரை அவதானம்!

Chithra / Oct 14th 2026, 12:37 pm
image


நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

இன்று (14) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.


அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.


சிவப்பு எச்சரிக்கைக்குள் இலங்கை; நாளை அதிகாலை வரை அவதானம் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (14) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Advertisement

Advertisement

Advertisement