கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து முறையான பொலிஸ் விசாரணை நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்படும் காட்சியை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் நேரலையில் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசி ஊடாகக் காண்பித்ததாக உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், இது மிகவும் தீவிரமான விடயம் என்பதால் விரிவான விசாரணை அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் பொலிஸாரிடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை மேற்கொண்ட பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்ட காட்சி உண்மையில் நேரலையில் காண்பிக்கப்பட்டதா? அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால், அது எவ்வாறு நிகழ்ந்தது? என்பது தொடர்பில் விசாரணைகள் மூலம் உண்மைகள் கண்டறியப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் தாம் கண்டவை, கேட்டவை மற்றும் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை உதய கம்மன்பில பொலிஸ் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
ஞானசாரரின் துறவற ஆடை களையப்பட்ட காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டதா சிக்கப்போகும் முக்கியஸ்தர் யார் கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து முறையான பொலிஸ் விசாரணை நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்படும் காட்சியை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் நேரலையில் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசி ஊடாகக் காண்பித்ததாக உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், இது மிகவும் தீவிரமான விடயம் என்பதால் விரிவான விசாரணை அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் பொலிஸாரிடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை மேற்கொண்ட பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்ட காட்சி உண்மையில் நேரலையில் காண்பிக்கப்பட்டதா அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால், அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மூலம் உண்மைகள் கண்டறியப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் தாம் கண்டவை, கேட்டவை மற்றும் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை உதய கம்மன்பில பொலிஸ் விசாரணையின்போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.