எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.
தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் அக் கப்பலை அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்ககைளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (09) தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியாக வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே அரச அதிகாரிகளுக்கான பெற்றோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்கள் அனைத்தும் நான்கு நாட்கள் மட்டும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு - பாகிஸ்தானில் இரு வாரம் பாடசாலைகள் மூடல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் அக் கப்பலை அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்ககைளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், நேற்று (09) தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியாக வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே அரச அதிகாரிகளுக்கான பெற்றோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அரச அலுவலகங்கள் அனைத்தும் நான்கு நாட்கள் மட்டும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.