• Jan 20 2025

மட்டக்களப்பில் கடும் மழையால் திறக்கப்பட்ட வான்கதவுகள் மக்களுக்கு எச்சரிக்கை

Thansita / Jan 19th 2025, 11:12 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதான குளங்கள் நிரம்பியுள்ளதன் காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் பிரதானகுளங்களான உன்னிச்சைக்குளம் நிரம்பிய நிலையில் இரண்டு இஞ்சி நீர் வான்பாயும் நிலையில் குளத்தின் மூன்று வான் கதவுகளும் ஐந்து அடி திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரூகம் குளம் ஏழு இஞ்சிகள் வான்பாயும் நிலையில் இரண்டு வான்கதவுகள் 07அடிகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நவகிரி குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

தற்போது நெற்செய்கை அறுவடை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மழைபெய்து வருவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கடும் மழையால் திறக்கப்பட்ட வான்கதவுகள் மக்களுக்கு எச்சரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பிரதான குளங்கள் நிரம்பியுள்ளதன் காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.மட்டக்களப்பின் பிரதானகுளங்களான உன்னிச்சைக்குளம் நிரம்பிய நிலையில் இரண்டு இஞ்சி நீர் வான்பாயும் நிலையில் குளத்தின் மூன்று வான் கதவுகளும் ஐந்து அடி திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரூகம் குளம் ஏழு இஞ்சிகள் வான்பாயும் நிலையில் இரண்டு வான்கதவுகள் 07அடிகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நவகிரி குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.தற்போது நெற்செய்கை அறுவடை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மழைபெய்து வருவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement