சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால், நேற்று சான்றுரைப்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளன.
அதன்படி, தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை தொடர்ச்சியாக 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், அதன் முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால், நேற்று சான்றுரைப்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.அதேநேரம், அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளன.அதன்படி, தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவை தொடர்ச்சியாக 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், அதன் முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.