• Nov 28 2024

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்...! 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...! samugammedia

Sharmi / Jan 4th 2024, 10:53 am
image

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்றையதினம்(04) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு பூராகவுமுள்ள 2302 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.

மலையகத்திலும் 04.01.2024 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் புனதி கெப்ரியல் மகளிர் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.

அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடமாகாணத்தை பொறுத்தவரையில் இன்றையதினம் மாலை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் உற்சாகமாக பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை அவதானிக்கமுடிந்தது.

அதேவேளை வடமாகாணத்தில் அமைக்கப்பெற்றுள்ள 141 பரீட்சை நிலையங்களில் 18461 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.



 

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. samugammedia க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்றையதினம்(04) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 2302 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 976 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 445 பரீட்சாத்திகள் பாடசாலை மூலமும் 65 ஆயிரத்து 531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றவுள்ளனர்.மலையகத்திலும் 04.01.2024 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் புனதி கெப்ரியல் மகளிர் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.வடமாகாணத்தை பொறுத்தவரையில் இன்றையதினம் மாலை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் உற்சாகமாக பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை அவதானிக்கமுடிந்தது.அதேவேளை வடமாகாணத்தில் அமைக்கப்பெற்றுள்ள 141 பரீட்சை நிலையங்களில் 18461 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement