• Jun 16 2024

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பொதுச்சபை பிரதிநிதிகள் வாக்களிக்க முடியாத நிலை...! முரளிதரன் சுட்டிக்காட்டு...!

Sharmi / May 23rd 2024, 8:26 pm
image

Advertisement

கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அனைத்து கூட்டுறவு சங்கங்களின்  சமாசங்களிலும் பொதுச்சபைக்கு தெரிவி செய்யப்படும் பிரதிநிதிகள் அனைவரும் தமது சமாசங்களிற்கு நிர்வாகம் தெரிவு செய்யப்படும்போது வாக்களிக்க கோரும் சந்தர்ப்பங்களில் அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களும் வாங்களித்தே நிருவாகம் தெரிவு செய்யப்படுவது வழமையாகும், எனினும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில்  மட்டும் சமாசத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபை உறுப்பினர்களிலிருந்து வாக்களிக்கும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்கும் நடைமுறை உள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் மட்டுமே இந்நிலை உள்ளதாக தெரிவித்த அவர், இந்நிலை மாற்றப்பட்டு பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கக் கூடிய நிலமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பொதுச்சபை பிரதிநிதிகள் வாக்களிக்க முடியாத நிலை. முரளிதரன் சுட்டிக்காட்டு. கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அனைத்து கூட்டுறவு சங்கங்களின்  சமாசங்களிலும் பொதுச்சபைக்கு தெரிவி செய்யப்படும் பிரதிநிதிகள் அனைவரும் தமது சமாசங்களிற்கு நிர்வாகம் தெரிவு செய்யப்படும்போது வாக்களிக்க கோரும் சந்தர்ப்பங்களில் அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களும் வாங்களித்தே நிருவாகம் தெரிவு செய்யப்படுவது வழமையாகும், எனினும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில்  மட்டும் சமாசத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபை உறுப்பினர்களிலிருந்து வாக்களிக்கும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்கும் நடைமுறை உள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் மட்டுமே இந்நிலை உள்ளதாக தெரிவித்த அவர், இந்நிலை மாற்றப்பட்டு பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கக் கூடிய நிலமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement