• May 26 2026

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல்..! - தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

Chithra / May 20th 2024, 2:59 pm
image

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதியிடமே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும்.

அதற்கு முன்னதாக ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல். - தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு  ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதியிடமே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் காணப்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும்.அதற்கு முன்னதாக ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement