தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வாக்கெடுப்பில் ஞா. சிறிநேசனுக்கே தனது ஆதரவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் எனவும், இதற்கு மாவட்ட தலைவர் என்ற அடிப்படையில் எவ்வித முடிவும் கிளை சார்பில் எடுக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் பொதுச் சபை உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை கோரி வருகின்றனர்.
இந்நிலையில் தலைவர் தெரிவில் யார் வெற்றி பெற்றாலும் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எங்களது பூரண ஆதரவை நாங்கள் வழங்குவோம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், எமது கட்சி தலைவர் தெரிவில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும், கட்சிக்கு அப்பாற்பட்ட தரப்புக்களிலும் முன்வைக்கப்படுகிறது.
இந்த விடயத்தில் ஒன்றை புரித்துக்கொள்ளவேண்டும்.
தலைவர் தெரிவானது எங்கள் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்களை அடிப்படையாக வைத்து இடம்பெறும் ஒன்று.
இதில் வெளித்தரப்பினரின் கருத்துக்களோ, சமூக ஊடகங்களில் இடம்பெறும் கருத்தாடல்களோ தலைவர் தெரிவிற்கு எந்த பங்களிப்பையும் வழங்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்பிற்கு samugammedia தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வாக்கெடுப்பில் ஞா. சிறிநேசனுக்கே தனது ஆதரவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் எனவும், இதற்கு மாவட்ட தலைவர் என்ற அடிப்படையில் எவ்வித முடிவும் கிளை சார்பில் எடுக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் பொதுச் சபை உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை கோரி வருகின்றனர்.இந்நிலையில் தலைவர் தெரிவில் யார் வெற்றி பெற்றாலும் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எங்களது பூரண ஆதரவை நாங்கள் வழங்குவோம் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மேலும், எமது கட்சி தலைவர் தெரிவில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும், கட்சிக்கு அப்பாற்பட்ட தரப்புக்களிலும் முன்வைக்கப்படுகிறது.இந்த விடயத்தில் ஒன்றை புரித்துக்கொள்ளவேண்டும்.தலைவர் தெரிவானது எங்கள் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்களை அடிப்படையாக வைத்து இடம்பெறும் ஒன்று.இதில் வெளித்தரப்பினரின் கருத்துக்களோ, சமூக ஊடகங்களில் இடம்பெறும் கருத்தாடல்களோ தலைவர் தெரிவிற்கு எந்த பங்களிப்பையும் வழங்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.