• Nov 23 2024

"மாத்திரை வாங்கித்தாருங்கள்" என மன்றாடிய முதியவர்! கதிரையிலே பலியான துயரம்- மனிதநேயமற்ற திருச்சி முகாம் நிர்வாகத்தின் செயல்..!! samugammedia

Tamil nila / Jan 28th 2024, 11:07 pm
image

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 

இது குறித்து முகாம் வாசிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், 

திருச்சி  சிறப்பு முகாம் சிறைவாசிகள் ஆகிய நாம் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ளோம்.

மேலும் சிறை முகாமில் இருந்து வந்த 74 வயது உடைய இருதய நோயாளியாகிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகுந்த சிகிச்சை வழங்காததால் 28.01.2024 இன்று சிறை முகாமில் உள்ள அறை  எண் 06 இல்  மரணம் அடைந்துள்ளார்

மேலும் அவர் சிகிச்சை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு பல முறை மனு எழுதிக் கொடுத்தும் அவரை வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற நிர்வாகம் அனுமதிக்கவில்லை மேலும் 27. 01. 2024 நேற்று கூட நடக்க முடியாமல் முகாமில் வாசலில் வந்து தனக்கு மாத்திரை வாங்கித் தருமாறும்  இல்லையெனில் நான் இறக்கும் தருவாயில் இருக்கின்றேன் என்று மன்றாடியும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் ஆகவே தான் அவர் உயிரிழந்து விட்டார்..

எனவே தயவு செய்து உயர் நீதிமன்ற நீதிபதியும் தாங்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தால் தான் சிறப்பு முகாம் நிர்வாகம் எப்படி செயல்படுகின்றது என தங்களுக்கு தெரிய வரும் தங்களுடைய வருகை இல்லாத பட்சத்தில் அன்னாரது பூதவுடல் முகாமை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம்.என அறிவித்துள்ளனர்.

"மாத்திரை வாங்கித்தாருங்கள்" என மன்றாடிய முதியவர் கதிரையிலே பலியான துயரம்- மனிதநேயமற்ற திருச்சி முகாம் நிர்வாகத்தின் செயல். samugammedia திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து முகாம் வாசிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், திருச்சி  சிறப்பு முகாம் சிறைவாசிகள் ஆகிய நாம் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ளோம்.மேலும் சிறை முகாமில் இருந்து வந்த 74 வயது உடைய இருதய நோயாளியாகிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகுந்த சிகிச்சை வழங்காததால் 28.01.2024 இன்று சிறை முகாமில் உள்ள அறை  எண் 06 இல்  மரணம் அடைந்துள்ளார்மேலும் அவர் சிகிச்சை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு பல முறை மனு எழுதிக் கொடுத்தும் அவரை வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற நிர்வாகம் அனுமதிக்கவில்லை மேலும் 27. 01. 2024 நேற்று கூட நடக்க முடியாமல் முகாமில் வாசலில் வந்து தனக்கு மாத்திரை வாங்கித் தருமாறும்  இல்லையெனில் நான் இறக்கும் தருவாயில் இருக்கின்றேன் என்று மன்றாடியும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் ஆகவே தான் அவர் உயிரிழந்து விட்டார்.எனவே தயவு செய்து உயர் நீதிமன்ற நீதிபதியும் தாங்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தால் தான் சிறப்பு முகாம் நிர்வாகம் எப்படி செயல்படுகின்றது என தங்களுக்கு தெரிய வரும் தங்களுடைய வருகை இல்லாத பட்சத்தில் அன்னாரது பூதவுடல் முகாமை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம்.என அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement