இராமநாதபுரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடையும் 18 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில், அதன் உடலை கைப்பற்றி வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கான கடல் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று (11) காலை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று பார்த்தபோது அங்கு 18 அடி நீளமும் 2 டன் எடையும் கொண்ட அரிய வகை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது.
இதையடுத்து வனத்துறையினர் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலை ஜே.சி.பி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு இறந்த திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது எனவும் இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத் திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் இது 18 அடி இருப்பதாகவும் , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை போன்றவற்றாலும் மோதி அடிபட்டு இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டு பாம்பன் தெற்கு கடற்கரையில் ஒதுங்கியதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு முடிவில் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்த ராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கடற்கரையில் திரண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாம்பன் கடலில் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம். இராமநாதபுரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடையும் 18 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.இந்நிலையில், அதன் உடலை கைப்பற்றி வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து பாம்பன் கடற்கரை மணலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கான கடல் பசு, திமிங்கலம், சுறா, டால்பின், கடல் குதிரை, கடல் பல்லி, உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.இந்த நிலையில் நேற்று (11) காலை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று பார்த்தபோது அங்கு 18 அடி நீளமும் 2 டன் எடையும் கொண்ட அரிய வகை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது.இதையடுத்து வனத்துறையினர் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடலை ஜே.சி.பி உதவியுடன் மீட்டு கால்நடை மருத்துவரை கொண்டு இறந்த திமிங்கலத்தை உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை மணலில் புதைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இறந்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது எனவும் இந்த வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.ஆனால், தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத் திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் எனவும் இது 18 அடி இருப்பதாகவும் , பெரிய கப்பல் அல்லது கடலுக்கு அடியில் உள்ள பாறை போன்றவற்றாலும் மோதி அடிபட்டு இறந்து உடல் அலைகளால் அடித்து வரப்பட்டு பாம்பன் தெற்கு கடற்கரையில் ஒதுங்கியதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு முடிவில் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்த ராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கடற்கரையில் திரண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.