• Nov 28 2024

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்..!

Chithra / Mar 29th 2024, 5:52 pm
image

 

கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை பார்வையிட வந்த நிலையில் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்தார்.

அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்.  கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.ஞானசார தேரரை பார்வையிட வந்த நிலையில் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்தார்.அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement