• May 16 2025

பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார்! எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

Chithra / May 16th 2025, 9:41 am
image

 

பாலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

1948ஆம் ஆண்டில் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது.

இதன் பிரகாரம்இ இலங்கைக்கான பலஸ்தீன தூதரகமும் பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக்குழுவும் இணைந்து டீநற்று மாலை கொழும்பில் நடத்திய 75 ஆவது நக்பா தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கடந்த காலங்களில் பல சர்வதேச வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது வெறுமனே கதைக்கு மட்டும் சுருங்கி, செயல் சார்ந்து பலவீனமான கட்டத்திற்கு வந்திருக்கும் பொழுதில், ஒரு நாடு என்ற வகையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீன மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, மத மற்றும் வாழும் உரிமைகளுக்காக நாங்கள் முன்நிற்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், பாலஸ்தீன மக்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கள் தாயகத்தை இழக்கும் பல சவால்களை எதிர்கொண்டனர். 

அவர்களின் சுயநிர்ணய உரிமையை, அதாவது அவர்களின் நிலம் மற்றும் அவர்களது நாட்டிற்கான உரிமையை எவராலும் பறிக்க முடியாது. பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த உரிமைக்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.  


பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்க நாம் தயார் எதிர்க்கட்சித் தலைவர் உறுதி  பாலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருக்கின்றனர். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15 ஆம் திகதி சர்வதேச நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.1948ஆம் ஆண்டில் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் “நக்பா தினம்” என்று அழைக்கப்படுகிறது.இதன் பிரகாரம்இ இலங்கைக்கான பலஸ்தீன தூதரகமும் பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டுக்குழுவும் இணைந்து டீநற்று மாலை கொழும்பில் நடத்திய 75 ஆவது நக்பா தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கடந்த காலங்களில் பல சர்வதேச வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது வெறுமனே கதைக்கு மட்டும் சுருங்கி, செயல் சார்ந்து பலவீனமான கட்டத்திற்கு வந்திருக்கும் பொழுதில், ஒரு நாடு என்ற வகையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீன மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, மத மற்றும் வாழும் உரிமைகளுக்காக நாங்கள் முன்நிற்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.அதேபோல், பாலஸ்தீன மக்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தங்கள் தாயகத்தை இழக்கும் பல சவால்களை எதிர்கொண்டனர். அவர்களின் சுயநிர்ணய உரிமையை, அதாவது அவர்களின் நிலம் மற்றும் அவர்களது நாட்டிற்கான உரிமையை எவராலும் பறிக்க முடியாது. பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த உரிமைக்காக நிபந்தனையின்றி முன் நிற்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement