• May 19 2026

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு; தப்பியோடியவர்களை மடக்கிப் பிடித்த நெல்லியடி பொலிஸார்

Chithra / May 19th 2026, 12:58 pm
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற இருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்றிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சந்தேகநபர்களை துரத்தி மடக்கிப் பிடிக்க முயன்ற போதிலும், அவர்கள் நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.


எனினும், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பதிவு செய்த பொதுமக்கள், உடனடியாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.


அதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிஸார், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் பரிமாறினர். இதன் அடிப்படையில் நெல்லியடி பகுதி ஊடாக தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை அவதானித்த நெல்லியடி பொலிஸார், இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் போது, பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட தங்கச் சங்கிலியும், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு; தப்பியோடியவர்களை மடக்கிப் பிடித்த நெல்லியடி பொலிஸார் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற இருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்றிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சந்தேகநபர்களை துரத்தி மடக்கிப் பிடிக்க முயன்ற போதிலும், அவர்கள் நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.எனினும், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பதிவு செய்த பொதுமக்கள், உடனடியாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.அதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிஸார், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் பரிமாறினர். இதன் அடிப்படையில் நெல்லியடி பகுதி ஊடாக தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை அவதானித்த நெல்லியடி பொலிஸார், இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் போது, பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட தங்கச் சங்கிலியும், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement