நாட்டில் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றைய விலையுடன் 4 லட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் மொத்தமாக 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நேற்று 394,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இன்றைய தினம் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
நாளுக்குநாள் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டு வருவது நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் 4 லட்சத்தை தாண்டிய தங்கம் - 10,000 ரூபாவால் உயர்வு; சோகத்தில் நகைப்பிரியர்கள் நாட்டில் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றைய விலையுடன் 4 லட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் மொத்தமாக 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நேற்று 394,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று 405,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் இன்றைய தினம் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 374,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நாளுக்குநாள் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டு வருவது நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.